ஆசிய நாடான மலேசியாவில் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை அந்நாட்டு மன்னர் நியமித்துள்ளார்.
மலேசியாவில் பிரதமராக இருந்துவந்த முஹிய்டின் யாசின் கூட்டணியில் ஏற்பட்ட சச்சரவு காரணமாக இந்த வாரம் தனது பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்து பதவி விலகினார்.
இதனையடுத்து ஐக்கிய மலாய் தேசிய கட்சியை சேர்ந்தவரும், கடந்த ஆட்சியில் துணை பிரதமராக இருந்தவருமான இஸ்மாயில் சப்ரி யாகோப்பை மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று புதிய பிரதமராக இஸ்மாயில் பதவியேற்கவுள்ளதோடு நாட்டின் அரசியல் குழப்பங்களுக்கு இவரது நியமனம் தீர்வளிக்கும் என நம்புவதாகவும் மன்னர் சுல்தான் அப்துல்லா கூறியுள்ளார்.