free website hit counter

2024இல் உலகக் கவனம் பெற்ற முக்கிய நிகழ்வுகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாற்றம்;  உலகளவில் 2024 ஆம் ஆண்டை எவ்வாறு அது மாற்றியது;

அதன் தாக்கங்கள் நன்மையையும் தீமையையும் கலந்தமைத்திருந்ததை நாம் உணர்ந்திருப்போம். லீப் வருடமாக அமைந்த 2024இல் உலகக் கவனம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்வையிடலாம். 

பாரிஸ் கோடைக்கால ஒலிம்பிக் 2024

 உலகின் மிக கவர்ச்சிகரமான நாடு என சொல்லப்படும் பிரான்ஸ்; 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை பாரிஸில் பிரம்மாண்டமாக நடாத்தியிருந்தது. இதில் முதன் முதலாக எதிலிகள் ஒலிம்பிக் அணியில் பங்கேற்றிருந்த குத்துச்சண்டை வீராங்கனை சிண்டி நகாம்பா முதல் பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்திருந்தார்.  

கோடிக்கணக்கான மக்களை வியப்பில் ஆழ்த்திய சூரிய கிரகணம்

2024ஆம் ஆண்டில் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் முழு சூரிய கிரகணத்தின் தரிசனத்தை பகலில் கண்டு ரசித்தனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நகரும்போது அதன் ஒளியை அணைத்துக்கொள்ளும் காட்சி இந்த ஆண்டு மிகவும் நீளமாக இருந்தது. மேலும் இந்த ஆண்டில் நான்கு கிரகணங்கள் நடைபெற்றதுடன், நோதன் லைட்ஸ் எனும் பச்சை ஒளிப்பிரவாகங்கள் உள்ளிட்ட வானவியல் நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தது குறிப்பிடதக்கது. 

திகைப்புடன் தொடரும் செயற்கை நுண்ணறிவு புரட்சி!

அறிவியல் புனைகதைகளை "செயற்கை நுண்ணறிவு"; அறிவியல் உண்மையாக மாற்றுகிறது எனலாம்.
சமீபத்திய AI முன்னேற்றங்களின் பட்டியல், அவற்றின் நடைமுறை பயன்பாடுகளைப் போலவே சுவாரஸ்யமாக உள்ளது. மரபணு நிலைமைகளை பகுப்பாய்வு செய்யவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், உற்பத்தி திறன்களை உருவாக்கவும் மற்றும் பலவற்றிற்கும் AI பயன்படுத்தப்படுகிறது. இதன் தொடர்பாக நோபல் பரிசுக் குழு 2024இன் இயற்பிலுக்கான நோபல் பரிசை John Hopfield மற்றும் Geofrey Hinton என்பவர்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்பான "செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் அடிப்படைக்காக'' வழங்கியிருந்தது. இதன் மூலம் நோபல் பரிசுக் குழு AI இன் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் எந்த நாடு முன்னனியில் உள்ளது என பல நாடுகள் போட்டியிடுகின்றன. வழமைபோலவே அதில் அமெரிக்கா மற்றும் சீனா முன்னனி வகிப்பதாக தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் செயற்கை நுண்ணறிவு எதிர்கொள்ளும் சவால்களும் அதிகம்; AI மாதிரிகளுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதுடன் AI புரட்சி பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் என்ற கவலையும் நிலவுவதாக கூறப்படுகிறது.

உலக நாடுகளின் பொதுத்தேர்தல்களும் வரலாற்று தோல்விகளும்

சுமார் நான்கு பில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறத்தாழ 80 நாடுகள், இந்த ஆண்டு முழுவதும் பொதுத் தேர்தல்களை நடத்தியிருந்தன. இதில் வங்காளதேசம், பிரேசில் உட்பட , பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா, மெக்சிகோ, இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்குகின்றன. ஜனநாயக நாடுகளில், கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போதைய கட்சி ஆதரவை இழந்துள்ளனர். இந்த தற்போதைய இழப்புகளில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

குறிப்பிடதக்கவையாக இலங்கையில், சிறுபான்மை கட்சியாக இருந்துவந்த தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளர்கள் மகத்தான வெற்றியை அளித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தனர். அடுத்தாக 2024ஆம் ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றிப்பெற்று ​​132 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியானார். 

2024 ஐரோப்பிய வெள்ளம்

காலநிலை மாற்றத்தால் 2024ஆம் ஆண்டு பல்வேறு காலநிலை தாக்கங்களை சந்தித்தது. கடந்த ஆண்டுகளை விட அதிகரித்த வெப்பநிலையை இவ்வாண்டின் தொடக்கத்தில் அனுபவித்தபோதபோதிலும் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் நீடித்த கனமழையால் பல ஐரோப்பிய நாடுகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதில் போலந்து, ஜெர்மனி, ருமேனியா, ஸ்பெயின், ஆஸ்திரியா, பிரான்ஸ், செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, மாண்டினீக்ரோ, பெல்ஜியம், அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகள் பரவலான சேதங்களையும் இறப்புக்களையும் சந்தித்தன.

உலக நீலத்திரை!

நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்தில் உலகளாவிய தவறான CrowdStrike மென்பொருள் புதுப்பிப்பு காரணமாக உலகளாவிய நவீன தொழிழ்நுட்ப சாதனங்கள் பலவும் நீல திரைகளால் ஆட்கொள்ளப்பட்டது.

மத்திய கிழக்கில் நீளும் யுத்தம்!

இந்த ஆண்டும் தொடர்ச்சியாக பல யுத்தகளங்களை கண்டுள்ளது. நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பல நாடுகளில் பரவ வழிவகுத்தது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, மியான்மர் உள்நாட்டுப் போர், சூடான் உள்நாட்டுப் போர் மற்றும் சஹேலில் இஸ்லாமிய கிளர்ச்சி உள்ளிட்ட பெரிய ஆயுத மோதல்களின் பட்டியல்கள் நீள்கிறது! இவை எதிர்கால அமைதிக்கான அடித்தளத்தை அமைத்ததா அல்லது இன்னும் கூடுதலான சீர்குலைவுகளுக்கு விதைகளை விதைத்ததா என்பதுதான் இப்போதைய கேள்வி.

Source : wikipedia.org | BBC | rescue.org | cfr.org

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction