அமெரிக்காவின் அதிகூடிய ஆடம்பரநகரம், சினிமா நகரம் என்ற சிறப்புக்கள் கொண்ட ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சென்ற புதன்கிழமை முதல் மூன்று நாட்களாகத் தொடர்ந்து எரிகிறது.
இந்தப் பெரும் இயற்கை அனர்த்தில், இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
லாஸ்ஏஞ்சல்ஸின் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு தீ பரவியுள்ளதாகவும், பலத்த காற்று வீசுவதால் தீயின் பரவலைக் கட்டுப்படுத்தவோ, அணைக்கவோ முடியாது திணறிவருகிறார்கள். இந்தப் பெரும் காட்டுத் தீயின் கோரத் தாண்டவத்தில் பல ஹாலிவுட் பிரபலங்களின் வீகளும் எரிந்து போயுள்ளதாகவும், இன்னும் பலரது வீடுகளுக்கும், ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் டோல்பி தியேட்டருக்கும் தீ பரவலாம் என அஞ்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றபோதும், பல இடங்களில் தீ இன்னமும் கட்டுபாட்டுக்குள் வரவில்லை என அறியவருகிறது. இந்த அனர்த்தம் காரணமாக, அப்பகுதிகளில் உள்ளன பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டிருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் எனப்பெற்றோர்களுக்கு மின்னஞ்சல்வழி அறியத் தரப்பட்டுள்ளது.
இந்தப் பெரும் தீ விபத்துக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும், காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் புவி வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு பற்றாக்குறை என்பன அடிப்படையாண காரணமாக இருக்கலாம் எனவும், இவ்வாறான சூழலில் ஒரு சிறு தீப்பொறியினால் கூட பெருந் தீ ஏற்படலாமெனவும், 100 கிலோ மீற்றருக்கும் அதிகமாக வீசும் காற்று அதனை வேகமாகப் பரவச் செய்யும் எனவும் சூழல் அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.