free website hit counter

இஸ்ரேலின் Iron Dome பாதுகாப்பு வளையம் உடைந்தது - ஈரான் புது ரக ஏவுகணைத் தாக்குதல் !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இஸ்ரேல்-ஈரான் மோதலில் கடந்த இரவு இஸ்ரேல் மீது அதிகளவிலான ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டது.ஈரானின் புதிய ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் புகழ்பெற்ற (Iron Dome) இரும்பு வளைய வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக உடைத்துள்ளன.

ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான ஃபட்டா-1 மூலம் கடந்த இரவில் பயங்கரத் தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. 1,400 கிலோமீட்டர் வரம்பைக் கொண்ட ஃபட்டா-1,  பாரம்பரிய ஏவுகணை இடைமறிப்பு பாதுகாப்பு அமைப்புகளுக்கு   சவாலாக  உள்ளது. 

ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக,  இஸ்ரேலின் வான் பாதுகாப்பு வலையமைப்பு சோர்வடையும் தருவாயில் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை எச்சரித்துள்ளது. இஸ்ரேலிய ஏவுகணை இடைமறிப்பான்களின் கையிருப்பு, இன்னும் சில நாட்களுக்குள் தீர்ந்து போகக்கூடும்.பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே அவற்றின் பயன்பாட்டை மதிப்பிடுவது குறித்து பரிசீலித்து வருவதுடன், மிக முக்கியமான அச்சுறுத்தல்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தோல்வியுற்ற இடைமறிப்புகள் மற்றும் இராணுவ உளவுத்துறை தளங்களில் சமீபத்திய நேரடித் தாக்குதல்கள் இதனை  உணர்த்துவதாகவும், இந்த வகையில், இஸ்ரேலின் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் திறன் இரண்டு வாரங்களுக்குள் சரிந்துவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க, இந்த மோதல் களத்தில், அமெரிக்கா உள்நுழைவதற்கான அறிவிப்புக்களையும், பெருமளவிலான தயார்படுத்தலையும் துரிதமாகச் செய்து வருகிறது. ஈரான் தலைநகரிலிருந்து மக்களை உடன் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ட்ரம் அறிவித்திருக்கும் நிலையில், 50 ஆயிரம் சவப்பெட்டிகளைத் தயார் செய்த வைத்துவிட்டு, ஈரானுடன் சண்டைக்கு வாருங்கள் என ஈரானியத் தலைவர் அயத்துல்லா கொமெய்னி சூளுரைத்துள்ளார். இவ்வாறான முறுகல் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தானும், சவூதியும் தங்கள் ஆதரவு நிலையில் பின் வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: