இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு பின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 12 ஆண்டுகளாக இஸ்ரேலின் பிரதமராக செயல்பட்டுவந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை முன்னாள் மந்திரியான நஃப்தாலி பென்னெட் பல திருப்பங்களுக்கு பின் பிரதமாக பொறுப்பெற்றுள்ளார்.
புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நேட்டன்யாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்த கூட்டணி ஒப்பந்தம் உருவானது. இந்த புதிய கூட்டணி கட்சிகளின் முக்கிய கட்சியான யாமினா கட்சியின் தலைவர் நஃப்தாலி பென்னெட் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
இதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து யெய்ர் லாப்பிட் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு நஃப்தாலி பென்னெட் பிரதமரானார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.