ஜி 7 உச்சிமாநாட்டின் சந்தித்துகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன்; இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கையால் கட்டப்பட்ட மிதிவண்டியை பரிசாக வழங்கியுள்ளார்.
தென்மேற்கு இங்கிலாந்தில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் தமது முதலாவது சந்திப்பை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொண்டனர்.
இதன் போது கையால் பொருத்தி கட்டப்பட்ட மிதிவண்டி ஒன்றினை அதிபர் ஜோ பிடன்; பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பரிசாக வழங்கியுள்ளார். பொதுவாக மிதிவண்டி ஒன்றினை கட்டமைக்க பல மாதங்கள் ஆகும். ஆனால் ஒரு சிறிய பிலடெல்பியா நிறுவனத்தால் சொற்ப நாட்களுக்குள் செய்யப்பட்ட இம் மிதிவண்டி; சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் என மூவகை வண்ணங்களில் உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பெரும்பாலும் லண்டனைச் சுற்றிப்பார்க்க மிதிவண்டியைதான் பயன்படுத்துவதாக குறிப்பிடபடுகிறது.
இதேவேளை அமெரிக்க அடிமை எதிர்ப்பு பிரச்சாரகர் ஃபிரடெரிக் டக்ளஸைக் (Frederick Douglass) காட்டும் ஒரு சுவரோவியத்தின் புகைப்படத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன்; அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பரிசாக வழங்கியிருப்பதும் குறிப்பிடதக்கது.