free website hit counter

கலிபோர்னியா காட்டுத்தீ அதிகரிப்பு! : ஹைட்டி பூகம்ப பலி எண்ணிக்கை 2000 ஐ எட்டியது

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வரலாற்றில் 2 ஆவது மிகத் தீவிர காட்டுத் தீயாகப் பதிவாகி இருக்கும் கலிபோர்னியாவைத் தாக்கி வரும் காட்டுத் தீ காரணாக வெப்பநிலை மிகவும் உயர்ந்துள்ளது.

மேலும் வேகமாக வீசி வரும் காற்றினால் தீச் சுவாலைகள் பரவி இக்காட்டுத் தீ இன்னமும் தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மலைப் பாங்கான கிராமப் பகுதியில் தங்கியிருக்கும் சிறிய சமூகம் ஒன்று இதனால் இடம்பெயர்ந்துள்ளதுடன் பல இடங்களில் திடீர் மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது. ஜூலை மத்தியில் ஏற்பட்ட டிக்ஸியே தீ என்றழைக்கப் படும் இந்தக் காட்டுத் தீயானது இதுவரை 604 000 ஏக்கர் வனத்தை எரித்து சாம்பலாக்கியுள்ளது. இதுவரை 1200 இற்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டடங்களும் தீக்கிரையாகி உள்ளன. மேலும் 12 000 தொடக்கம் 28 000 குடிமக்களைக் கொண்ட சுமார் 16 000 கட்டடத் தொகுதிகள் அபாய வலயத்தில் இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் ஹைட்டி ஐத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக இடம்பெற்று வரும் மீட்புப் பணிகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டுமே மீட்கப் படுவது கவலையளிப்பதாக உள்ளது. இந்தக் கொடிய பூகம்பத்தில் சுமார் 2868 வீடுகள் முற்றிலும் தரை மட்டமாகின. 5700 இற்கும் அதிகமானவர்கல் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிர் காக்கும் மருத்துவ மனைகள் பலவும் இடிந்துள்ளதாலும், கனமழையும், காற்றும் தீவிரமாக வீசிக் கொண்டிருப்பதாலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், உயிர் காக்கும் பணிகளிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு ஹைட்டியில் பிரதமரால் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction