உலகின் 20 முக்கிய பொருளாதாரங்களின் தலைவர்கள் பெரிய பன்னாட்டு வணிகங்கள் மீதான உலகளாவிய குறைந்தபட்ச வரிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இது பெரிய வணிகங்களின் லாபத்திற்கு குறைந்தது 15% வரி விதிக்கப்படும்.
ரோமில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் மற்றும் கோவிட் கட்டுப்பாடு குறித்த அம்சங்கள் உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் உள்ள நிலையில்; இம் மாநாடு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலக தலைவர்கள் முதல் முதன் முதலாக நேரில் கூடுவது குறிப்பிடதக்கது.
அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட வரி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 2023 க்குள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அரசாங்கங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக நிலவும் வரிப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் இந்த விதிகள் நோக்கமாகக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.