உலகளவில் கொரோனா தடுப்பூசிக்கு தேவை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தினால், வறிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கோவிட் தடுப்பு மருந்தை பங்கிட்டு வழங்கும் ஐ.நாவின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் தடுப்பூசிகளைப் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தானுக்கு கோவிட் தடுப்பூசிகளை விநியோகித்து அவற்றைப் பாதுகாத்து வைக்க அமெரிக்க உதவியை நாடுவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார். கோவாக்ஸ் திட்டமானது 2021 ஆமாண்டு இறுதிக்குள் உலகின் வறிய நாடுகளுக்கு சுமார் 2 பில்லியன் டோசேஜ்கள் தடுப்பூசிகளை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவைச் சென்றடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, அமெரிக்க காங்கிரஸ்மேன் டொம் சுவோஸ்ஸி மற்றும் செனட்டர் லிண்ட்சே கிரஹம் ஆகியோருடன் கோவிட் தடுப்பூசி தவிர்த்து பிற அரசியல் விவகாரங்களையும் பேசியுள்ளார். மேலும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஜூன் மாதமும் முக்கிய பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நிகழ்த்தவுள்ளது.
இதேவேளை சீனாவில் மே 22 ஆம் திகதி புதிதாக 19 பேருக்கு கோவிட்-19 தொற்று இனம் காணப் பட்டிருப்பதாகவும், முன்னதாக சமீப நாட்களாக அங்கு தினசரி சராசரியாக 10 புதிய தொற்றுக்கள் இனம் காணப் பட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)
அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 33 882 333 : மொத்த உயிரிழப்புக்கள் : 603 876
இந்தியா : 26 530 132 : 299 296
பிரேசில் : 16 047 439 : 448 291
பிரான்ஸ் : 5 593 962 : 108 526
துருக்கி : 5 178 648 : 46 071
ரஷ்யா : 5 001 505 : 118 482
பிரிட்டன் : 4 460 446 : 127 716
இத்தாலி : 4 188 190 : 125 153
ஜேர்மனி : 3 653 019 : 87 960
ஸ்பெயின் : 3 636 453 : 79 620
ஆர்ஜெண்டினா : 3 514 683 : 73 688
கொலம்பியா : 3 210 787 : 84 228
போலந்து : 2 865 622 : 72 928
ஈரான் : 2 823 887 : 78 381
மெக்ஸிக்கோ : 2 395 330 : 221 597
தென்னாப்பிரிக்கா : 1 632 571 : 55 772
கனடா : 1 355 765 : 25 203
பாகிஸ்தான் : 900 552 : 20 251
பங்களாதேஷ் : 787 726 : 12 348
சுவிட்சர்லாந்து : 687 353 : 10 775
இலங்கை : 161 242 : 1178
சீனா : 90 973 : 4636