free website hit counter

தனது நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தலையீடு! : சீனா

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பூகோள மறைமுக வர்த்தகப் போர், கோவிட்-19 பெரும் தொற்றின் தோற்றம் போன்ற காரணிகளால், ஏற்கனவே கடும் முறுகல் நிலையில் இருக்கும் அமெரிக்க சீன உறவில் இன்னொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய அமெரிக்கா விதித்திருக்கும் தடை காரணமாக குறித்த நிறுவனங்களை அடக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

வர்த்தகம், தென் சீனக் கடற்பரப்பு ஆக்கிரமிப்பு, உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல் செயற்பாடுகள், மற்றும் கொரோனா வைரஸ் பரவல் எனப் பல விவகாரங்கள் இரு நாட்டு உறவுக்கும் தடையாக உள்ளன. இந்த உறவு முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் இன்னும் மோசமடைந்திருந்தது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்று ம் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி சீனாவின் பல மாபைல் செயலிகளுக்குக்குத் தடை விதிக்கப் பட்டது.

சீன இராணுவத்துடன் தொடர்புள்ளது என்ற பெயரில் 31 சீனப் பெரு நிறுவனங்களது பங்குகளுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் சீனாவின் முக்கிய நிறுவனங்களது பங்குகள் கடும் சரிவடைந்தன. அண்மையில் இத்தடைப் பட்டியலை மீளாய்வு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடென் தலைமையிலான குழு இதில் மேலும் 28 சீன நிறுவனங்களைச் சேர்த்து தடையை விரிவு செய்துள்ளது.

பைடெனின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா தக்க பதிலடி தரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மறுபுறம் முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கை 2 ஆண்டுகளுக்கு முடக்கி அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது. இது தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என டிரம்ப் விசனம் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction