மியான்மாரில் பெப்ரவரியில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அரச தலைவி ஆங் சான் சூகி, அதிபர் உட்பட நூற்றுக் கணக்கான முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப் பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டனர்.
ஆங் சான் சூகி அண்மையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப் பட்டிருந்தார்.
விசாரணை முடிவில் தற்போது மியான்மாரின் இராணுவம் ஆங் சான் சூகியிடம் நிபந்தனை வாக்குமூலத்தின் பின் அவர் மீது புதிய ஊழல் குற்றச்சாட்டுக்களை விதித்துள்ளது. இதன் போது ஆங் சான் சூகி சட்ட விரோத தங்க கொள்வனவு மற்றும் 1/2 மில்லியன் டாலர் பெறுமதியான பணம் ஊழல் ஆகிய தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியான்மாரில் பெப்ரவரி ஆட்சிக் கவிழ்ப்பின் பின்பு இன்று வரை அங்கு அரசியல் குழப்பமும், வன்முறையும் நீடித்த வண்ணமே உள்ளது.
இராணுவத்துக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 850 பொது மக்கள் வரை கொல்லப் பட்டுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற அந்நாட்டு அரச தலைவியான ஆங் சான் சூகி ஊழல் மற்றும் தேசத்துரோகம் போன்ற குற்றங்கள் சுமத்தப் பட்டு கைது செய்யப் பட்டிருந்தார்.