உலகின் வெப்பமான நகரங்களின் உலக தரவரிசையில் முதலிடத்தில் குவைத்தின் தலைநகரான குவைத் நகரம் உள்ளது, இந்நகரில் அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று 49°C ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அது 49.9 °C உயர்ந்துள்ளது.
அதற்கு அடுத்து இரண்டடாவது இடத்தில் சவூதி அரேபியாவின் அல்-அஹ்சா (48.2°C) மற்றும் சவுதி அரேபியாவில் அல்-காய்சுமா (47°C) நகரங்கள் அதிக வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளன.
உலகளாவிய வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்றாம் இடத்தில் மொராக்கோ உள்ளது. ஜூன் 29, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை உலகின் மிக அதிக வெப்பநிலை கொண்ட முதல் 15 இடங்கள் குறித்த விபரங்களை, 'எல் டொராடோ வெதர்' என்ற சிறப்பு வலைத்தளம் வெளியிட்டிருந்தது.
ஐரோப்பாவில் அதிக வெப்பநிலையை ஸ்பானியாவின் மெரிடா நகரம் ( 44.2°C ) பதிவு செய்துள்ளது. அதற்கடுத்த முதல் பத்து இடங்களிலும், போர்த்துக்கல்லின் சில நகரங்களும், ஸ்பானியாவின் சில நகரங்களும் அதிக வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளன. சுவிற்சர்லாந்தில் ஜெனிவா நகரம் அதிகளவிலான வெப்ப நிலையாக 33°C பதிவு செய்துள்ளது.
இத்தாலியின் தென்பகுதியில் இந்தவாரம் 36°C வரையில் வெப்பநிலை உயரலாம் என இத்தாலிய காலநிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன..
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    