ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளை விட கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த ஆஸ்திரேலியாவில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பல நகரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மெல்போர்ன் நகரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா முதல் அலையால் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் இடையில் நீக்கப்பட்டாலும் பின்னர் மீண்டும் தொற்று அதிகரித்தமையால் 9 மாதங்களாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது.
இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானதுடன் பொதுமுடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அந்நாட்டு அரசு பொது முடக்கத்தை ரத்து செய்வதாக நேற்று இரவு அறிவித்தது. இந்நிலையில் மக்கள் தற்போது வெளியில் சுதந்திரமாக செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.