2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தை மாற்றியமைப்பதன் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் 18 நாடுகள் மற்றும் மூன்று அமைப்புகளுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர திடக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் முதன்முறையாக கழிவுகள் கொண்டு செல்லப்பட்டதைக் குறிக்கும் வகையில், கொழும்பில் உற்பத்தியாகும் திண்மக் கழிவுகளை புத்தளத்திற்கு கொண்டு செல்வது ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கையின் உடன்படிக்கையின் விதிமுறைகளை மாற்றுவதற்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான எச்சரிக்கை விடுத்தார், அத்தகைய ஒப்பந்தங்கள் பேரம் பேச முடியாதவை என்று வலியுறுத்தினார்.