அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் கல்விப் பருவத்தின் இரண்டாம் கட்ட அட்டவணையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானம் தன்னிச்சையானது மற்றும் சட்டத்தில் செல்லுபடியாகாது என இலங்கையின் உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கில் நடைபெறும் மிகப்பெரிய வருடாந்த பட்டத்திருவிழா வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் தைப் பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15, 2024) நடைபெற்றது.
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு அமைவாக நீர்க் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் நீர் கட்டணச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளை நனவாக்க, உடன்பிறப்புகளின் ஒற்றுமைக்கு நிகரான உறுதியுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
தடைப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்க, கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை (LRT) ரத்து செய்ததற்காக இலங்கை செலுத்த வேண்டிய பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.