free website hit counter

எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஹைட் பார்க்கில், நடத்தப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எவ்வித தடைகள் வந்தாலும், நடத்தப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால்

சமகி ஜன பலவேகய கட்சியின் உறுப்புரிமையை நீக்கியமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததையடுத்து கட்சி உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக டயானா கமகே தெரிவித்துள்ளார். மனுதாரர், தான் அரசாங்கத்தின் உறுப்பினர் அல்ல, ஆனால் SJB கட்சியின் அரசியலமைப்பின்படி சுதந்திரமாகவும் தனது மனசாட்சிக்கு இணங்கவும் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறினார்.

SJB பொதுச் செயலாளர், அதன் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் பிரதிவாதிகளாக டயானா கமகே குறிப்பிட்டுள்ளார். SJB யில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கான முடிவு, SJB இன் அரசியலமைப்பை மீறும் வகையில் எடுக்கப்பட்டதாக அறிவிக்கவும் மனுதாரர் கோரியுள்ளார்.


மற்ற கட்டுரைகள் …