free website hit counter

தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டக் களங்களின் மீதான தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள், உதவியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்றுக்காலை காலிமுகத்திடலில் அமைதியாக நடந்து வந்த ஆர்பாட்டக்காரர்களினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பெரிதாகி நாடாளாவிய ரீதியில், அரசாங்க உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாகவும், அவர்களது சொத்துக்களுக்குச் சேதங்களையும் விளைவித்துள்ளது.

நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷ பதவி விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இன்று அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மேல் மாகாணத்திற்குப் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு, தற்பேபாது நாடு முழுவதற்குமாகப்  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிந்தைய தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்கள் கலவரபூமியாக மாறின.

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அலரிமாளினை முன்பாக பிரதமருக்கு ஆதரவாகவும், எதிராவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மற்ற கட்டுரைகள் …