பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள நிலுவையை வழங்குவதற்காக திறைசேரி 4.2 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய யுஜிசி தலைவர் கூறியதாவது: 75 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்கள் வரும் திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்புவார்கள். அவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி தலையிட்டு தீர்வை பெற்றுக் கொடுத்தார். அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
“வேலைநிறுத்தங்கள் இல்லாத நிலைக்கு நம் நாட்டைக் கொண்டு சென்றால் அதுவே நாட்டின் வளர்ச்சியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.
வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.