ஆயுதப்படை வீரர்களுக்கான ரேஷன் கொடுப்பனவு வழங்கும் முறைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் இன்று (29) அறிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, புதிய முறையின் கீழ் முப்படையினரின் மாதாந்த சம்பளத்துடன் ரேஷன் கொடுப்பனவுகள் இணைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பணியாளர்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கும், நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் இந்த சீரமைப்பு நோக்கமாக உள்ளது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். -4TamilMedia