தமிழீழ விடுதலைப் புலிகளின் மகாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றசாட்டில் மூன்று நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் (டிஐடி) கைது செய்துள்ளனர்.
28, 35 மற்றும் 45 வயதுடைய சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகவும், இந்த ஆண்டு கொண்டாட்டங்களாக முந்தைய LTTE மகாவீரர் நினைவேந்தல்களின் பழைய காட்சிகளை பகிர்ந்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டியமை மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஆகியவற்றின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிஐடி மற்றும் டிஐடியினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். --DailyMirror