வாகன இறக்குமதி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கம், எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் வாகன இறக்குமதியாளர்களுக்கு உறுதியளித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்தார்.
மேலும், 2025 பெப்ரவரியில் வாகன இறக்குமதியை அனுமதித்தால் தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்ய இலங்கை மத்திய வங்கி (CBSL) இணங்கியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியமும் (IMF) வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.