பொதுமக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு பொருளாதார நிவாரணம் கிடைக்கும் என உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனோர், காணி விடுவிப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க உரையாற்றினார்.
இந்த நெருக்கடியான விடயங்களைத் தீர்ப்பதற்கு உடனடி கவனம் மற்றும் செயற்திறன் நடவடிக்கைகளின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பிரச்சினை தொடர முடியாது எனவும், 2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி, இடம்பெயர்ந்த அனைவரையும் மீள்குடியேற்றுவதற்கான திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    