65 வயதுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகி, அதன் மூலம் நாட்டுக்கே முன்னுதாரணமாக செயற்பட எண்ணியுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், அரச துறையில் விதிக்கப்பட்டுள்ள ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியலிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“நமது வரலாற்றில் நிரூபிப்பது போல், ஒரு ஆளுநருக்கு 80 வயது இருக்கும் போது, அவர் தனது கடமைகளைச் செய்ய மன உறுதி உள்ளவரா? எனது அரசியல் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைப்போம். 65 வயதிற்கு முன்னர் ஓய்வு பெற நான் தயாராக உள்ளேன்” என ரணசிங்க தெரிவித்தார்.