யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுண ராமநாதன், தனது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாததாக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு எதிராக ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுண ராமநாதன் புதன்கிழமை (ஜனவரி 15) தனது வழக்கறிஞர்கள் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாததாக்கக் கோரும் மனுவை சமூக ஆர்வலரும் ‘அபினவ நிவஹல் பெரமுன’வின் தலைவருமான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுண ராமநாதன் கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்க மருத்துவராகப் பணியாற்றுவதை ராஜினாமா செய்யாமல் போட்டியிட்டு நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறியதாகவும், இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்றும் மனுதாரர் கூறுகிறார்.
ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அமர்வு முறையாக நியமிக்கப்படாததால், மறுநாள் இந்தக் கோரிக்கையைச் செய்யுமாறு நீதிபதி அவருக்குத் தெரிவித்தார்.
அதன் பிறகு, மனுவின் விசாரணையை நீதிபதி 2025 ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். (நியூஸ்வயர்)