free website hit counter

ஐஎம்எப் உடன்படிக்கை குறித்து பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2015 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க வாங்கிய கடன் குண்டுதான் 2020 ஆண்டில் வெடித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மீண்டும் கடன்களைப் பெற்றால் மேலும் நாடு இருளுக்குள் தள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,2022 ஆம் ஆண்டை விடவும் 2026 ஆம் ஆண்டில் பிரச்சினைகள் அதிகமாகும். கடன் குண்டு 2026 இல் வெடித்துச் சிதறும். சர்வதேச நாணய நிதியத்தின் செல்லவேண்டும் என முதன் முறையாக அமைச்சரவையில் நானே தெரிவித்திருந்தேன். ஆனால் இன்று இதற்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருப்பதற்கு காரணம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். நாடு வங்குரோத்தை அடைவதற்கு ரூபா காரணம் அல்ல என்றும் டொலர் பிரச்சனையே, குறிப்பாக வெளிநாட்டு கடனை செலுத்த முடியாமையே என்றும் உதய கம்பன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த உடன்படிக்கையில் டொலர் பற்றாக்குறைக்கான எந்த முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை என்று உதய கம்பன்பில குற்றம் சுமத்துகின்றார்.2015 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் வாங்கியிருந்ததாகவும் அந்த கடனை செலுத்த முடியாத காரணத்தினால் 2020 ஆண்டு பாதிக்கப்பட்டிருந்தாக உதய கம்பன்பில குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction