பல கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு.
பொசன் போயாவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பல கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் அபராதம் செலுத்தாததால் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அபராதம் உட்பட 40 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நாளையுடன் 20 வருட சிறைத்தண்டனையை அனுபவித்த கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.