free website hit counter

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைகிறது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி,
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,186 ரூபாவாகும்.

5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,281 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைப்பு, தேசிய மட்டத்தில் ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தல், டொலரின் பெறுமதி குறைப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, புதிய விலை நிர்ணயம் இன்று முதல் அமுல்படுத்தப்படும். சந்தையில் பற்றாக்குறை இல்லாமல் சிலிண்டர்களை விநியோகிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரியான முதித பீரிஸ் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: