free website hit counter

2023 GCE A/L முடிவுகள் (2024) வெளியீட்டு தேதி அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அறிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணி இந்த ஆண்டு பெப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இவ்வருடம் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடாத்த கல்வி அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த இன்று முன்னதாக அறிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெறும் என அவர் மேலும் அறிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: