free website hit counter

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் : அமைச்சர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 280 ரூபாவாக வீழ்ச்சியடையும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சரவைக்கு பிந்தைய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் குணவர்தன, முன்னோக்கி செல்லும்போது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு விரைவில் ரூ.280ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

“அந்நியச் செலாவணி நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறையின் போது, அமெரிக்க டாலர் ரூ.400க்கு மேல் விற்கப்பட்டதைப் பார்த்தோம். ஆனால், தற்போது ரூ.314 ஆக குறைந்துள்ளது. இது மேலும் குறையும், குறைந்தபட்சம் ரூ.280 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.

நிலத்தின் விலைகளும் தற்போதைய உச்சநிலையிலிருந்து வீழ்ச்சியடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்ததுடன், ஏற்கனவே வாடகைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction