2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்கள் இரண்டு வருடங்களுக்குள் உயர்தரப் பரீட்சைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் ஒரு கட்டமாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் மற்றும் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னரே உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் உயர்தர வகுப்புகள் இந்த வாரம் ஆரம்பமாகும் என்றும், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் தொடரும் என்றும் அவர் கூறினார்.
இம்முறையின் மூலம் பெறுபேறுகளுக்காக முன்னைய 3-4 மாத இடைவெளி கைவிடப்பட்டு மாணவர்கள் உயர்தரக் கல்வியைத் தொடரவும், உயர்தரக் கல்வியை நிர்ணயிக்கப்பட்ட இரண்டு வருட காலப்பகுதிக்குள் முடிக்கவும் இயலும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மே மாதம் வெளியிடப்பட்ட 2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் பெறுபேறுகள் உயர்தர மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.