நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிக ஆபத்துள்ள டெங்கு வலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25,891 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த காலப்பகுதியில், நாடு முழுவதும் 57 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக NDCU தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயங்களும் 14 ஆக அதிகரித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் 5,624 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,939 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 2,487 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 1,986 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,441 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,372 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று NDCU தெரிவித்துள்ளது.