வடமாகாணத்தில் நடைபெற்ற 244 ‘மகாவீரர் நாள்’ நினைவேந்தல் நிகழ்வுகளில் 10 இடங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பான சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, நவம்பர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான மாவீரர் வாரத்தில் வடக்கில் 244 நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதில் 10 இடங்களில் மட்டும் விடுதலைப் புலிகளின் சில சின்னங்கள் காட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்,'' என்றார். (Adaderana)