அண்மையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரேணுகா பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் இன்று (டிசம்பர் 05) கொட்டிகாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். (நியூஸ்வயர்)