இலங்கையின் அனைத்துப் பாடசாலை ஆசிரியர்களும் பணிதவிர்ப்புப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். அரசின் பொருளாதார கொள்கை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள அடையாளப் போராட்டமாக இதனை அறிவித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும், குறித்த நாட்களில் குறித்த நேரத்திற்கு பாடசாலைக்கு கடமைக்கு சமூகமளிக்க முடியாமைக் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகும் ஆசிரியர்கள், தம்மை சிறந்த மன நிலையுடன் கடமையாற்ற அரசு வழி செய்ய வேண்டும் எனக் கோரி இந்த ஒரு நாள் பணி தவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதற்காக அவர்கள் அனைவரும் சுகயீன விடுறைகோரிய கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். சில ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் சுகயீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பியும் வைத்துள்ளார்கள்.
அதிபர், ஆசிரியர்களின் இந்த சுகயீன போராட்டம் தொடர்பில், ஆசிரியர்கள் 100வீத ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக ஆசிரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.