சர்வதேச கால்பந்தாட்டப் சம்மேளனம், இலங்கை கால்பந்தாட்ட அணிகள் மீது தடைகளை அறிவித்துள்ளது.
சர்வதேச கால்பந்தாட்டப் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இரண்டு போட்டித் தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பினை இலங்கை இழந்துள்ளது.
இது தொடர்பிலான அதிகாரபூர்வ கடிதம் இலங்கை கால்பந்தாட்டப் சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள 23 வயதுக்கும் கீழ்ப்பட்ட ஆகிய கால்பந்தாட்டப் போட்டி ஆகியனவற்றில் இலங்கை பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை, கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் மூன்றாவது தரப்பின் தலையீடு இருந்துள்ளதாக தெரிவித்தே, இந்த தடை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.