free website hit counter

3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது. இதே போல் அக்ஷர் பட்டேல், உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 85 ரன்னிலும், இஷான் கிஷன் 73 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 51 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி வரை நின்ற ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் 352 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்படி அந்த அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய பிராண்டன் கிங் (0) ரன் ஏதும் எடுக்காமலும், கெய்ல் மேயர்ஸ் 4 ரன்களும், ஷாய் ஹோப் 5 ரன்களும், கார்டி 6 ரன்களும், ஹெட்மயர் 4 ரன்களும், ஷேப்பர்டு 8 ரன்களும், ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய அலிக் அதனாசே 32 ரன்களும், காரியா 19 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி ஆகியோர் போராடினர். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 55 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் குடகேஷ் மோட்டி 39 ரன்னும், ஆலிக் அதான்சே 32 ரன் எடுத்தனர்.

இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், உனத்கட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction