free website hit counter

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஜோகோவிச் கனடா ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகல்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜோகோவிச் 4 முறை கனடா ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
கனடா ஓபன் தொடர் குறித்த அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த தொடரில் இருந்து விலகுவதாக டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள செர்பியாவைச் சேர்ந்த வீரர் ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேட்டியளித்த அவர் கூறுகையில்,'நான் கனடாவில் மிகவும் சந்தோசத்துடன் விளையாடி உள்ளேன். ஆனால் இந்த முறை என்னால் பங்கேற்க இயலாது. விம்பிள்டன் தொடர் முடிவடைந்த நிலையில் நான் இன்னும் சோர்வாக இருக்கிறேன். ஆதலால் எனக்கு இன்னும் ஓய்வு தேவை எனப் பயிற்சியாளர்கள் கூறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக'கூறியுள்ளார்.

மேலும் அவர், 'தன்னுடைய இந்த முடிவிற்கு மதிப்பளித்த கனடா ஓபன் தொடர் இயக்குனர் கார்ல் ஹேல்க்கு நன்றி தெரிவித்து உள்ளார். வரவிருக்கும் ஆண்டுகளில் நடக்கும் தொடர்களில் கண்டிப்பாகப் பங்கேற்பேன்' எனக் கூறினார்.

ஜோகோவிச் 4 முறை கனடா ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பங்கேற்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction