free website hit counter

உலக அரங்கை திரும்பி பார்க்க வைத்து வெண்கலம் வென்ற இலங்கை அணி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உலக ஸெபக்தக்ர போட்டியில் மூன்றாமிடம்
. இந்த ஜூலை 6 - 16 வரை தாய்லாந்தில் நடைபெற்ற 36 வது King’s Cup உலக கிண்ணத்துக்கான ஸெபக்தக்ரோ போட்டியின், ஆண்கள் பிரிவில், அணிக்கு மூன்று பேர் விளையாடும் ‘ரெகு’ (Regu) குழு போட்டியில் இலங்கை மூன்றாமிடத்தை வெற்றிகொண்டு வெண்கலப் பதக்கத்தையும் சவால் கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது.
இவ் ரெகு வகை போட்டித் தொடரில், புள்ளிகளின் அடிப்படையில், முறையே லாஓஸ் (Laos) தங்கப் பதக்கத்தையும், ஈரான் (Iran) வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையும் சீனா (China) வும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இலங்கை அணியின் ஆண்கள் பிரிவில்,
(1) சகீ அஹ்மத்
(2) அதீப் ஹஸன்
(3) அஸ்ஹார் ஹுஸைன்
(4) ஹஸ்ஸாம் அஹ்மத்
(5) முஹம்மத் ஆதிப்
(6) முஹம்மத் நுஸ்கி (கம்பளை)
ஆகியோர் விளையாடினர்.

இவர்களில் முதல் ஐந்து பேரும் புத்தளம் மலே விளையாட்டுக் கழகம் (Kumpulan Malayu De Puttalam - Malay Sports Club) அங்கத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுலகக் கிண்ண வெற்றிவாகை வரை இலங்கை அணியை வழிநடத்துவதில் அர்ப்பணத்துடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் இலங்கை ஸெபக்தக்ரோ சம்மேளனத்தின் (Sri Lanka Sepaktakraw Federation) தலைவர் நிலாம் ஹலால்தீன், தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்கள் இந்திக சமரசிங்க உட்பட பயிற்றுவிப்பாளர்களுக்கும் முகாமைத்துவத்துவத்திற்கும் பெரும் பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction