2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் டோக்கியோ நகரில் ஆரம்பமாகியது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வீர வீராங்கனைகள் உட்பட பார்வையாளர்களுக்கும் இவ்வாண்டின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் புதியதொரு அனுபவமாக மாறவிருப்பது குறிப்பிடதக்கது.
ஜப்பான் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று 23ஆம் திகதி தொடங்கின. பங்கேற்கும் 204 நாடுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தமது நாட்டு தேசிய கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க்கவிழாவில் ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாக் ஒலிம்பிக் மேடைக்கு வருகை தந்திருந்ததோடு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேரடி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தொடக்க விழாவில் 950 பார்வையாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.
தொடக்கவிழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு நாட்டு அணியினரும் தேசிய கொடி ஏந்திச் செல்லும் நிகழ்வில் முதலில் கீரிஸ் நாடு தேசிய கொடி ஏந்தி சென்றது. கூடியிருந்தோர் ஆனந்த கரகோசங்களை எழுப்பி உற்சாக வரவேற்பளித்தனர். அடுத்ததாக ஆர்ஜென்டினா அணியினர் மிகுந்த உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து வருகையை தந்தனர். ஜப்பானிய தேசிய கொடி ஏந்திய ஜப்பான் நாட்டு அணியினர் அணிவகுப்பின் இறுதியில் வரவுள்ளனர்.
இந்திய அணி சார்பில் குத்துச்சண்டை உலக சாம்பியனான வீராங்கனை மேரிகோம் மற்றும் ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோர் தேசிய கொடி ஏந்தும் கவுரம் வழங்கப்பட்டிருந்தது.
மொத்தம் 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்கின்றனர். 33 வகையான விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.