free website hit counter

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் திரில் வெற்றி! : அரையிறுதியில் மோதும் 4 அணிகள்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை இந்தியா அணி 7 விக்கெட்டுக்களாலும் அவுஸ்திரேலிய அணியைத் தென்னாப்பிரிக்க அணி 10 ரன்களாலும் வெற்றி கொண்டுள்ளன.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் ஓல்டு டிரஃப்போர்ட் மைதானத்தில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இந்தியாவுக்கு வெற்று வாய்ப்பு 72% வீதம் எனவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 28% வீதம் எனவும் கணிக்கப் பட்டுள்ளது. 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் மோதுகின்றன. அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு 42% வீதம் என்றும், இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 58% வீதம் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறத் திட்டமிடப் பட்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் 15 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், இங்கிலாந்து 12 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும், நியூசிலாந்து 11 புள்ளிகளிடன் 4 ஆம் இடத்திலும் உள்ளன. ஏனைய அணிகள் யாவும் வெளியேற்றப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction