free website hit counter

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் சாதனை...!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதன்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது.
இந்தியா அணி சார்பில் மயங்க் அகர்வால் 150 ரன்களையும், அக்சர் படேல் 52 ரன்களையும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 47.5 ஓவர் வீசி 119 ரன்களை கொடுத்து இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உலக சாதனை படைத்தார். 

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் இந்திய வீரர்கள் 10 பேரின் விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அஜாஸ் படேல் பெற்றார். 

இதற்கு முன்னதாக இரண்டு வீரர்கள் மட்டுமே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்ற சாதனையை படைத்திருந்தனர்.

தற்போது, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஜிம் லேகர், அனில் கும்ளே இடம்பெற்றுள்ள சாதனை பட்டியலில் 3-வது நபராக நியூசிலாந்து அஜாஸ் படேல் இணைந்துள்ளார். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction