35ஆவது உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கை
அணியினருக்கு உலக மல்யுத்த போட்டியில் Fair Play (பெயார் ப்ளே) விருது கிடைக்கப்பெற்றது.
அண்மையில் ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் இடம்பெற்ற உலக இராணுவ விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை விமானப்படையை சேர்ந்த எயார் கொமடோர் உதுல விஜேசிங்க அவர்களின் தலைமையின் கீழ் பங்குபற்றிய இலங்கை அணியினர் உலக மல்யுத்த போட்டியில் Fair Play விருதினை பெற்றுக்கொண்டனர்.
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் இலங்கை விமானப்படைகளைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களை கொண்டு அமையப்பெற்ற இந்த அணியானது போட்டிகளில் தொழில்முறை ரீதியாகவும் , உரிய உபாயங்களை பயன்படுத்தியமை நேர்மையாக விளையாடியதன் காரணமாக இந்த விருதினை பெற்றுக்கொண்டனர்.
இந்த அணி சார்பாக கோப்ரல் உதார பெனாண்டோ 61 கிலோ பிரிவிலும், சிரேஷ்ட வான்படை வீரர் லக்மால் விஜயசூரிய 74 கிலோ பிரிவிலும், சிரேஷ்ட வான்படை வீரர் நிஷான் வல்பிட்டிய அவர்கள் 92 கிலோ பிரிவிலும், சிரேஷ்ட வான்படை வீரர் ருவன் கல்யாண 125 கிலோ பிரிவிலும் பங்குபற்றினர் இந்த குழுவின் முகாமையாளராக குறூப் கெப்டன் ரந்திக குணவர்தன குழு பயிற்சியாளராகவும் உத்தியோகபூர்வமாக கலந்துகொண்டனர்.