free website hit counter

LPL கிண்ணத்தை 3 ஆவது தடவையாக சுவீகரித்து, வரலாறு படைத்தது ஜாப்னா கிங்ஸ் (Jaffna Kings)

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது.
இதில் ஜாப்னா கிங்ஸ்-கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜாப்னா கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சண்டிமால் 49 ரன்கள் எடுத்தார். போபரா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜாப்னா அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய குர்பாஸ் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரை சதமடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். மேலும் சதீரா சமரவிக்ரமா 44 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ஜாப்னா அணி 19.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜாப்னா கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கும், தொடர் நாயகன் விருது சதீரா சமரவிக்ரமாவுக்கும் வழங்கப்பட்டது.

வளர்ந்து வரும் வீரருக்கான விருது ஜாப்னா கிங்ஸ் அணியின் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு வழங்கப்பட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction