free website hit counter

நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து - டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோ ரூட்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 132 ஓட்டங்களில் சுருண்டது. இங்கிலாந்தின் அறிமுக பந்துவீச்சாளர் போட்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 141 ஓட்டங்களுக்கு சுருண்டது. நியூசிலாந்தின் டிம் சௌதீ 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி மிட்சேலின் சதம்(108), ப்ளெண்டலின் அரைசதத்தின்(96) உதவியுடன் 285 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சிலும் பந்துவீச்சில் மிரட்டிய போட்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டுவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின்னர் 279 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி வாகை சூடியது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஜோ ரூட் 115 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்கள் எடுத்தார். அவர் சரியாக 100 ஓட்டங்களை எட்டியபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 10,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.

இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும், உலகளவில் 14வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும், இளம் வயதில் (31) டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற அலஸ்டையர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

ஜோ ரூட் 118 டெஸ்ட் போட்டிகளில் 10,015 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 26 சதங்கள், 53 அரைசதங்கள் அடங்கும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction