free website hit counter

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுக்கும்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில், ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரும், 2 ஊழல் கண்காணிப்பு ஆணையர்களும் பதவி வகித்து வருகிறார்கள்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் வெளியேறினால் முழு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது.

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகள் துறை செயல்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது ஏராளமானவர்களுக்கு 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …