சென்னையில் ஓமைக்கிரான் எப்போது அறிமுகமானது? கேள்வி எழுப்புகிறார் மக்கள் மருத்துவர்
புகழேந்தி!
அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் பணி புரியும் 39 மருத்துவ + முன்கள பணியாளர்கள் ஓமைக்ரான் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், என் அவர்களின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலை (2தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா?) பற்றி, அரசு மற்றும் பத்திரிக்கைகள் ஏன் செய்தி வெளியிடவில்லை?
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 54 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டும்,அதில் 39 பேருக்கு ஓமைக்ரான் தொற்றிற்கான வாய்ப்பு (S ஜீன் Drop) அதிகமிருந்தும் (வெளிநாட்டு பயணம் இல்லை- அப்படியானால் உள்ளூரிலே ஓமைக்ரானா?), அந்த 39 பேரின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலை குறித்து (அனைவரும் நிச்சயமாக கொரோனா தடுப்பூசி எடுத்திருப்பார்கள் என நம்பலாம்?) யாரும் கேள்விகள் எழுப்பாமல் இருப்பது அறிவியல் ரீதியாக சரியா?
அரசும் ஏன் அந்த முக்கிய புள்ளிவிபரத்தை வெளியிடவில்லை? எங்கே போனது ஒளிவுமறைவற்ற தன்மை? பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே" என காணொளி ஒன்றில் மூலம் கேள்வி எழுப்பியிருக்கிறார் மக்கள் மருத்துவர்
மரு.வீ.புகழேந்தி.