free website hit counter

தை1 அறிவிப்பு: முக ஸ்டாலினுக்கு செக் வைக்கும் ஆளுநர் ரவி!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக

அறிவிக்கவிருந்த முயற்சிக்குத் தமிழக ஆளுநர் முட்டுக் கட்டை போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு கருணாநிதி, கடந்த 2006-2011இல் ஆட்சியிலிருந்தபோது தமிழ் வருடப்பிறப்பு சித்திரை மாதத்தின் முதல் தேதி என்கிற தமிழறிஞர்களின் கூற்றை  மாற்றி தை 1 தமிழ் வருட பிறப்பாக அறிவித்தார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கருணாநிதி போட்ட உத்தரவை மாற்றி  சித்திரை 1தான் தமிழ் வருடப்பிறப்பு என்று ஏட்டிக்குப் போட்டியாக அறிவித்தார்.

தற்போது தனது தந்தையின் கனவைச் செயல்படுத்தும் வகையில்,  மு.க.ஸ்டாலின், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, மூத்த அமைச்சர் துரைமுருகனை அழைத்து, தை முதல் தேதியைப் புத்தாண்டாக அறிவிக்க ஒப்புதல் கோரும் மனு ஒன்றை அவரிடம் கொடுத்து அன்று மாலையை கவர்னரை சந்திக்கச் சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையிலிருந்து வெளியில் வந்த துரைமுருகன் தனது உதவியாளரிடம், “இன்று மாலை ஆளுநரை சந்திக்கவேண்டும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குங்கள்” என்று சொல்லிவிட்டு மதியம் உணவுக்குச் சென்றுவிட்டார்.

பிறகு, மாலை. 5.00 மணிக்கு மேல் அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முதல்வர் கொடுத்த மனுவைக் கொடுத்துப் பேசினார். அதையடுத்து நேராக முதல்வரை சந்தித்து ஆளுநருடன் நடந்த சந்திப்பு பற்றிப் பேசினார். அதன் பிறகு பொங்கலுக்குத் தமிழக மக்களுக்கு கொடுக்கப்போகும் பரிசு பொருட்களை வழங்கும் பையில் தை1 தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் அச்சடிக்கப்பட்டது.

இந்நிலையில்... தை 1ஐ தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க முதல்வர் கொடுத்து அனுப்பிய கடிதத்தின் மீது கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். முதல்வர் பொங்கல் பரிசு வழங்கும்போது தை 1 தமிழ் புத்தாண்டாக அறிவிப்பாரா என்றும், ஜனவரி 5 ஆம் தேதி சட்டமன்றத்தின் ஆளுநர் உரையில் தமிழ் புத்தாண்டு தை என்ற அறிவிப்பு இடம்பெறுமா என்று எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது. இதற்கு இன்னும் சில தினங்களில் விடை தெரிந்துவிடும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction