தமிழகத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்டிருக்கும், தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ந் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இன்று தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கின்றார்.
தற்போதுள்ள தொற்றின் நிலை, மேலும் தளர்வுகளை அளிப்பது, என்பன குறித்தும், அடுத்தகட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் 5வது முறையாக ஊரடங்கு உத்தரவை 28ந் திகதிவரை நீட்டிப்பது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பாகவும் ஆராயப்படுவதாகவும் அறியவருகிறது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    