அனைத்து நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிராத்திப்பதாக பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் திகதி முதல் சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் தோன்றிய இந்தக்கலை உடலுக்கும். உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும் சிறந்ததொரு கலையாக அனைத்து இடங்களுக்கும் பரவி பல்வேறு மக்களால் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் 7வது சர்வதேச யோகா தினமாக இன்று ஜூன் 21ஆம் திகதி கொண்டாடப்பட்டுவருவதோடு இந்நாளில் விஷேசமாக பிரபலங்கள் பொது இடங்களில் பல்வேறு தரப்பினரும் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபடுவர். ஆனால் கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எளிமையாக இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது.
இதன்போது பிரதமர் நரேந்திர மோடி யோகா தின சிறப்பு நிகழ்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர்; ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை. என தெரிவித்துள்ளார்.