free website hit counter

அபுதாபியில் முதலீட்டாளர்கள் மாநாடுக்கு செல்ல முதலமைச்சருக்கு தடை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அபுதாபியில் முதலீட்டாளர்கள் மாநாடுக்கு செல்ல முதலமைச்சருக்கு தடை.
திருவனந்தபுரம்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை மந்திரி அழைப்பு விடுத்து இருந்தார்.

இதையடுத்து அபுதாபி செல்வதற்காக முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த மனுவை ஆய்வு செய்தார்.

பின்னர், முதல்-மந்திரி கலந்து கொள்ளும் அளவுக்கு அந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல எனக்கூறி பினராயி விஜயனின் அபுதாபி பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி மறுத்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction